Saturday 27th of April 2024 10:58:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டாமல்  ஓயமாட்டோம் என மியான்மர் மக்கள் உறுதி!

இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டாமல் ஓயமாட்டோம் என மியான்மர் மக்கள் உறுதி!


மியான்மரில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஓயப்போவதில்லை எனத் தெரிவித்து இன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை 40 மில்லியன் மியான்மர் மக்கள் ஆதரவுடனேயே ஆட்சியில் இருந்து அகற்றியதாக இராணுவம் வெளியிட்டுள்ள கருத்துக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இராணுவ ஆட்சியின் கீழ் நியாயமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெறுபவர்களிடம் ஆட்சி கையளிக்கப்படும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறினர்.

இராணுவ ஆட்சியாளர்களால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சுகிக்கு எதிரான இயற்கை பேரிடர் முகாமைத்துவ சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோதமாக ஆறு தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் மீதான வழக்கு மீண்டும் மார்ச் -01 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் ஜனநாயகத்தை நேசிக்கிறோம், இராணுவ ஆட்சியை வெறுக்கிறோம்" என ஆங் சாங் சுகியின் தேசிய ஜனநாயன லீக் நாடாளுமன்ற உறுப்பினர் சித்து மாவுங் யாங்கோன் நகரில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.

“மியான்மரில் இராணுவ சதித்திட்டத்தை அனுபவிக்கும் கடைசி தலைமுறையாக நாங்களாகவே இரக்க இருக்க வேண்டும்." எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மியான்மரில் உள்ள 53 மில்லியன் மக்களின் 40 மில்லியன் மக்கள் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஆதரவளித்தள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஜா மின் துன் கூறினார்.

ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை நிராகரித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தை நியாயப்படுத்தும் பேலிக்கூத்தான கருத்தே இதுவென அவர்கள் விமர்ச்சித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE